அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம், ரோமுலஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் பரப்புரையில் ஈடுபட்டார்.
அவர் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் சிலர், காஸா போர் குறித்த முழக்கங்களை எழுப்பி அடிக்கடி குறுக்கீடு செய்ததால் கமலா ஹாரிஸ் எரிச்சல் அடைந்தார்.
தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதைச் சொல்லுங்கள் என்று கமலா கடுமையாகப் பேசினார்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளதால் நான் இங்கு பேச வந்துள்ளேன் என்றும், நான் பேசுவதை கேட்க விரும்பவில்லை என்றால் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, முழக்கங்கள் எழுப்பியவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.